நாகர்கோவிலில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிகழ்வில் கழக இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர்.வி.ஆர்.பி பரமசிவம் பங்கேற்றார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால்.2008_ம் ஆண்டு மார்ச் திங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அந்த காலத்தில் அதிமுகவில் ஒரு ஆற்றல் வாய்ந்த இயக்கமாக இருந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரட்டை தலைமை, ஒற்றை தலைமை என ஏலம் போடும் ஒரு நிலை ஏற்பட்டப்போதும், காலப்போக்கில் அதிமுக வில் இளைய சமூகம் இல்லாத ஒரு சூழல் நிலவி வரும் சூழலில்.
சட்டமன்றத் தேர்தல் 2026_ பொதுத் தேர்தலை அதிமுக சந்திக்க இருக்கும் நிலையில். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் தான் கட்சிக்கு எதிர்காலம் என்ற நிலையில்.
அதிமுக, பாஜகவின் உறவை முறித்துக் கொண்டு தனிக்கூட்டணி கண்டு , நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்து.

அதிமுக பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைத்த கையோடு, பாஜகவின் அமித்ஷா தமிழகத்தில் பாஜக பங்கேற்கும் கூட்டணி ஆட்சி என தினம் ஒரு அறிக்கையை கொடுத்து பாஜகவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்.
இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையை தூசி தட்டும் வகையில்.
நாகர்கோவிலில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை கூட்டம். குமரி மாவட்ட பாசறையின் செயலாளர் அக்ஷயா கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாசறையின் செயலாளர் டாக்டர்.பரமசிவன், கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் திரைப்பட நடிகை கெளதமி, குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சரும், குமரி மாவட்ட பொறுப்பாளர் இராஜலெட்சுமி, முன்னாள் அமைச்சர்
கே.டி.பச்சைமால், மாவட்ட கழக இணைச் செயலாளர்சாந்தினி பகவதியம்மன். அகஸ்தீசுவரம் தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள்.தாமரை தினேஷ்குமார், எஸ்.ஜெஸீம் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய பாசறையின் செயலாளர் பரமசிவம் அவரது பேச்சில். பூத் கமிட்டி அமைக்கும் அனைத்து பூத்து பகுதியிலும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள் இரண்டு பேர் உடன் இருப்பதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார். தளவாய் சுந்தரம் அவரது பேச்சில் அடிக்கோடிட்டு சொல்வது போல் தெரிவித்தது. 2026_ தேர்தலில் கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என தெரிவித்தார்.
இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிகழ்வில் இளைஞர்களை காட்டிலும் முதியவர்களே அதிகமாக இருந்தனர்.