கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் தற்பொழுது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தப் அடுக்குமாடி குடியிருப்பு 1,840 வீடுகள் உள்ளன. இதில் 6,000 திற்கு மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

இங்கு முறையான சாலை வசதி இல்லை என்றும், மேலும் அங்குள்ள சாலைகள் பழுது அடைந்து உள்ளதாகவும், முக்கிய பிரச்சினையாக தண்ணீர் பிரச்சனை இருந்து வருவதாகவும், காலை 2 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருவதாகவும், கழிவறைக்குச் செல்லும் நேரத்திற்குள் தண்ணீர் தீர்ந்து விடுவதாகவும், 14 மாடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் வேலை செய்யவில்லை.

இதனால் மேல் மாடிக்குச் செல்லும் முதியவர்கள், நோயாளிகள் மிகுந்த அவதி அடைந்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கும் அவர்கள், மேலும் வீடுகள் ஒதுக்கப்பட்டவர்கள் குடி இருக்காமலும், மற்றவர்கள் குடியிருந்து வருவதாகவும் குற்றம் சாட்டும் அவர்கள், அடுக்குமாடி குடியிருப்பு சுற்று சுவர் இல்லாததால், சமூக விரோதிகள் உள்ளே வந்து செல்வதால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகவும், மேலும் அங்கு உள்ள சாக்கடைகள் சரியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் கழிவு நீர் தேங்கி உள்ளதாகவும், எந்த வித முறையான பாதுகாப்பும் இல்லை.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறும்போது எந்த ஒரு பதிலும் அளிப்பதில்லை எனவும், இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை கடிதம் அனுப்பி உள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நேற்று இரவு முதல் மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.