காரைக்கால் அடுத்த சுரக்குடியில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் அடுத்த சுரக்குடி அக்ரஹாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கடந்த 05ம் தேதி கணபதி ஹோம பூஜையுடன்முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இன்று காலை 04ம் கால யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதியுடன் நிறைவுபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. யாக சாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சாஸ்திரிகள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிக்கு மகாபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.