கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே நான்கு வயது சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காளியம்மன் கோவில் அருகே உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மணோஜ்முந்தா மற்றும் மோனிகா தேவி தம்பதியரின் மகள் ரோசினியை, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தூக்கிச் சென்றது.
திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் குழந்தையின் தாய் அலறி அடித்துக் கொண்டு சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஓடி வந்து, குழந்தையை தேடும் பணியில், போலீசார் மற்றும் வனத்துறையுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.