நாகப்பட்டினம் ஒன்றியம் பாப்பா கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெருவில் சுமார் 59 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை என தொடர்ச்சியாக கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று திடீரென நாகை தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் அமர்ந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை ஈடுபட்டனர் இதில்உடன்பாடு எட்டாத நிலையில் சுமார் ஒரு மணி நேரமாக சாலை மறியல் போராட்டம் நீடித்தது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 20 நாட்களாக குடி தண்ணீர் வரவில்லை எனவும் வரும் தண்ணீர் உப்பு கலந்த தண்ணீராக உள்ளதாகவும், சாலை வசதி மின்விளக்கு வசதி இல்லை என குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் உப்பு தண்ணீரை வட்டார வளர்ச்சி அலுவலரை குடிக்க வைத்து இந்த தண்ணீரை எப்படி குடிப்பது என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் குடிநீர் லாரி மூலம் தண்ணீர் வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.