• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கால்நடை மருத்துவமனையை சீரமைக்க கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

May 24, 2025

ஒத்தக்கடை வௌவால் தோப்பு அருகே கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கான இரும்பு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையிலும் செடிகள் கொடிகள் படர்ந்து கழிவுநீர் குப்பைகள் காணப்படும் அவல நிலையில் உள்ளதை தொடர்ந்து விவசாயிகள் கால்நடை மருத்துவமனையை சீரமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை கால்நடை மருத்துவமனையில் உரிய இரும்பு உபகரணங்கள் பராமரிப்பு இன்றி கேட்பாரற்று உள்ளது. இந்த மருத்துவமனையில் அதிகப் படியான மரங்கள் செடிகள் முற்றிலும் சூழ்ந்து வளாகத்தில் குப்பைகளை கொட்டும் இடமாகவும், மாறி உள்ளது. கொடிக்குளம் வௌவால் தோப்பு மற்றும் யானைமலை ஒத்தக்கடை சுற்றி உள்ள கிராமங்களில் கால்நடைகள் சார்ந்து விவசாயம் பெருமளவில் நடந்து வருகிறது.

ஒத்தக்கடை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கால்நடை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு கால்நடைகளை வளர்த்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

யானைமலை ஒத்தக்கடை கொடிக்குளம் வௌவால் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கான மருத்துவ பராமரிப்புகளாக மதுரை மாவட்ட கால்நடை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

மழைக்காலம் தொடங்கும் மாதங்களில் கால்நடைகளுக்கான மருத்துவ பராமரிப்பு மிகவும் அவசியமாக உள்ளது. ஆடுகள், மாடுகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் என அனைத்து உயிரினங்களுக்கும் மருத்துவ பராமரிப்பு மிகவும் அவசியமாகவும் உள்ளது.

பாதுகாப்பு உபகரணங்களான இரும்பு கம்புகளில் சுற்றி மழைத் தண்ணீர், கழிவு நீர், செடிகள் கொடிகள் காணப்படுவதாலும் விஷ ஜந்துக்கள் இருப்பதாலும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய முடியாத அவநிலையாக தற்போது வரை இருந்து வருகிறது.
இந்த நிலையில் வௌவால் தோப்பு யானைமலை ஒத்தக்கடை கால்நடை மருத்துவமனையில் ஆறு அடிக்கும் மேலாக செடிகள் கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன.

இதனால் கால்நடைகளை சரியான முறையில் இரும்பு உபகரணங்கள் இல்லாமல் மருத்துவ பரிசோதனை செய்ய முடியாத அவநிலையாக கால்நடை மருத்துவர்கள் சிரமப்பட்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர். தற்போது வரை போதுமான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் சிரமமாக உள்ளது.
அதாவது குப்பைகள் செடிகள் கொடிகள் அப்புறப்படுத்தி கால்நடைகளுக்கான இரும்பு உபகரணங்களை பராமரிக்க சம்மந்தப்பட்ட மதுரை மாவட்ட கால்நடை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.