புதுச்சேரி அதிமுக சார்பில் அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் 1008 தேங்காய் உடைத்து தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிச்சாமியின் 71 – வது பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி நலமுடன் வாழ எல்லையில் போர் புரியும் நம் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், வெற்றி பெற வேண்டியும், புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று ஸ்ரீ மணக்குள விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து, 1008 தேங்காய் உடைத்து தங்கதேர் இழுத்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சுப்பையா சாலையில் உள்ள புனித இருதிய ஆண்டவர் பசிலிக்கா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், முல்லா வீதியில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. பின்னர் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம். பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக அனைத்து பிரிவு நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.