வணிகர் தினத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தை தோற்றுவித்த த.வெள்ளையனுக்கு அஞ்சலியுடன் டேவிட்சன் வணிகர் தின வாழ்த்து கூறினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில அமைப்பாளர் டேவிட்சன், வணிகர் தின வாழ்த்துகளும், தமிழ் நாடு வணிகர் சங்கத்தை உருவாக்கி, குமரி முதல் கோட்டை வரை தமிழகத்தின் எட்டு திசைகளிலும் பெரு நகரங்கள் முதல் சிற்றூரில், சின்ன பெட்டிக் கடை நடத்தும் வியாபாரி வரைக்கும் நாம் ஒரு பாதுகாப்பான அமைப்பில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர். இயற்றிய கொள்கை ஒளிச்சுடரில் தலைவர் வெள்ளையன் காட்டிய அடிச்சுவட்டில் பயணிப்போம் என்பதை வியாபாரிகள் தினம் ஆன மே5ல் சபதம் எடுப்போம். உலக தொழிலாளிகள் தினத்திற்கு அடுத்து வருகிற வியாபாரிகள் தினமான மே.5ல் என்று போல் இன்றும் ஒன்று படுவோம் என தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில அமைப்பாளர் டேவிட்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.




