கடந்த காலங்களில் ஏற்பட்டது போல் விவசாயிகள் தற்கொலைகளை தற்போது காண முடியாத அளவிற்கு தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகின்றது : தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசினார்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30 ஆவது தேசிய மாநாடு நாகையில் இன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டின் நிறைவில் 17ஆம் தேதி மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அகில இந்திய விவசாய சங்க தலைவர் ராஜன் கிஸ்சி சாகர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், கேரளா வேளாண்மை துறை அமைச்சர் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் டெல்லி பஞ்சாப் ஹரியானா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் : டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் அத்தகைய போராட்டம் நடக்காத அளவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வழி நடத்தி என பெருமை தெரிவித்த அவர், உழுபவனுக்கே நிலம் சொந்தமாக 2, 1/2 ஏக்கர் உருவாக்கி கொடுத்தது கலைஞர் தலைமையிலான அரசு எனவும், விவசாயிகளுக்கு கலைஞர் ஆட்சியில் 23,68000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு தற்போது வரை நடைமுறை இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் விவசாயிகள் போராட்டங்கள் இல்லாமலே தலை நிமிர்ந்து வாழும் சூழல் முகஸ்டாலின் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும், பன்மொழி விவசாயிகள் கலந்து கொண்டு இந்த மாநாட்டில் நிறைவேற்றும் தீர்மானம் மற்ற விவசாயிகளுக்கு வழிகாட்டுதலாக இருக்கும் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஏற்பட்டது போல் விவசாயிகள் தற்கொலைகளை தற்போது காண முடியாத அளவிற்கு தமிழகத்தில் ஆட்சி நடைபெறுவதாகவும், விவசாயிகளிடம் கடந்த நான்கு ஆண்டுகளாக நேரடியாக சந்தித்து அந்த கருத்துகளை அறிந்து தமிழகத்தில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பெருமை தெரிவித்தார்.