100 நாள் வேலை உறுதி திட்ட நிதி ரூபாய் 4034 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு தராமல் வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பித்தளைப்பட்டி பிரிவு அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் மோடி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 4034 கோடி ரூபாய் நிதியை தராமல் வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி கூறியதாவது:

இந்தியாவிலேயே தமிழகம் தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு ஒதுக்கிய நீதி இன்னும் ஒரு நாளில் வர இருக்கிறது. இதற்கு மேல் காலம் தாழ்த்தக்கூடாது, மீறினால் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும். தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும், இல்லையெனில் மிகப்பெரிய ஜனதிரள் போராட்டம் தமிழ்நாட்டில் உருவாகும், நமது முதல்வர் அவர்கள் அந்த அளவிற்கு விட மாட்டார், மத்திய அரசுக்கு எச்சரிக்கையாக தான்
தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார்கள். 2024-25 ஆண்டுக்கான நிதி வரவுள்ளது, 2025-26 ஆண்டிற்கான நிதி நாளை வரவிருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக வராமல் நிலுவையில் உள்ள அந்த நிதியை இன்னும் விடுவிக்கப்படவில்லை ரூபாய் 4034 கோடி ரூபாய் நிதியும் விடுவிக்கப்படவில்லை, அதற்காக தமிழகத்தில் 100 நாள் வேலைகள் நிறுத்தப்படவில்லை, பணிகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது.
தமிழகத்தில் திமுகவிற்கு போட்டியாக எந்த கூட்டணியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்தியாவிலேயே ஜனநாயகத்தை நிலை நாட்டுபவர் நமது தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தான் கலைஞர் கருணாநிதியைப் போல இந்திய ஜனநாயகத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்கி காத்து வருகிறார் என்று கூறினார்.
மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நடைபெற்று வருகிறது, மன்னர் ஆட்சி நடைபெறவில்லை. தமிழகத்திலும் சரி மக்களாட்சி நடைபெற்று வருகிறது. மக்களாட்சியின் தத்துவத்தை உயர்த்தி பிடித்து நன்றாக ஆட்சி செய்து வருபவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தான்.
ஆத்தூர் ஒன்றிய செயலாளர முருகேசன் பித்தளைப்பட்டி முன்னாள் தலைவர் உலகநாதன் வழக்கறிஞர் காமாட்சி மற்றும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.