சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் போராட்டம் நடைபெற்றது.
சிவகாசி அருகே ஆமத்தூர் வருவாய் கிராமத்தில் நீர்வரத்து ஓடைகள் வண்டி பாதை இவைகளை ஆக்கிரமிப்பு செய்த சிவகாசியை சேர்ந்த லவ்லி குரூப் ஆப் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை விருதுநகர் தாசில்தார் மாவட்ட சிறப்பு டிஆர்ஓ ஆகியோர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு உள்ளது என்று அறிக்கை சமர்ப்பித்தும் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.


உடனடியாக இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி மாநில பொருளாளர் சுப்பராஜ் கவலூர் சீனிவாசன் வாசுதேவன் கேசவன் ராமர் நாகராஜ் சாத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜேஷ் சுந்தர்ராஜ் மற்றும் விவசாயிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றும் வரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து திரும்ப மாட்டோம் என போராட்டம் நடைபெற்றது.
