‘என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க ஜெயலட்சுமி … கலெக்டருக்கே தெரியாம’! அமைச்சர் மூர்த்தி முன்னிலையில், பேரூராட்சி செயல் அலுவலரை கலெக்டர் சங்கீதா கண்டித்த சம்பவம் மதுரை மாவட்டத்தையே பரபரப்புக்குள்ள ஆக்கியிருக்கிறது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் காவல் நிலையம் பின்புறமாக உள்ள அரசு இடத்தில் 5.12 கோடி மதிப்பில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜை விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் வந்த நிலையில், அமைச்சர் மூர்த்தி வருவதாக தகவல் கிடைத்தது. சொன்ன மாதிரியே அமைச்சர் மூர்த்தி அலங்காநல்லூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பூமி பூஜை விழாவுக்கு வந்தவுடன், “எங்க ஜெயலட்சுமி மேடம்” கலெக்டர் மேடம் வரலையா? என்று கேள்வியை எழுப்பியவுடன். அது வந்து சார்… என செயல் அலுவலர் தலையை சொரிய! அவங்களுக்கு தகவலே சொல்லல சார் …… என்று ஜெயலட்சுமி சொல்ல … அமைச்சர் மூர்த்தி ஏம்மா இப்படி பண்றீங்க? உங்கள பத்தி நிறைய கம்ப்ளைன்ட் வருது! முடிஞ்சா இங்க வேலை பாருங்க …இல்லன்னா வீட்டுக்கு போங்கம்மா. உடனே கலெக்டர் கூப்பிடுங்க என்று அமைச்சர் மூர்த்தி கூறி இருக்கிறார். கலெக்டர் வந்து சேர்வதற்கு சிறு நேரத்தில் குழப்பமாகவும் , பதட்டமாகவே நிகழ்ச்சி நடந்து கொண்டே இருந்தது. பின்பு அலங்காநல்லூர் பூமி பூஜை விழாவுக்கு வந்த சங்கீதா… இந்த ஜெயலட்சுமி எப்பவுமே தான்தோன்றித்தனமாக தான் செயல்படும். இந்த அம்மாவை பத்தி புகார் நிறைய எனக்கு வந்திருக்கு. பேரூராட்சிகளின் துறையின் இயக்குனர் கிட்ட கண்டிப்பா நடவடிக்கை எடுக்கச் சொல்லி பரிந்துரை செய்யப் போறேன் என்று பூமி பூஜை விழாவை முறையாக முடித்துவிட்டு மிக சங்கடத்தோடு அமைச்சர் மூர்த்தியும், கலெக்டர் சங்கீதாவும் கிளம்பி விட்டனர். அமைச்சர் மூர்த்தியும், கலெக்டர் சங்கீதாவும் கிளம்பிய பின்பு அங்கு கூடியிருந்த ஊழியர்களிடம் சலசலப்பு இருந்து கொண்டே இருந்தது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் இன்று (16.03.2025) அமைச்சர் பி. மூர்த்தி ரூ. 5.12 கோடி மதிப்பில் புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் மா. சௌ. சங்கீதா இ. ஆ. ப. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ. வெங்கடேசன் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி ஆகியோர் உடன் உள்ளனர்.
இது பற்றி மேலும் விவரம் அறிய அலங்காநல்லூர் பேரூராட்சியில் பணி புரியும் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம் …
அமைச்சர் மூர்த்தி சார் வந்த உடனே எங்களுக்கு கையும் ஓடல, காலும் ஓடல… எங்க செயல் அலுவலர் ஜெயலட்சுமி எப்பவுமே இப்படித்தான். யாரையும் மதிக்காது. திமிரா செயல்படும். கலெக்டர் அம்மா கிட்ட முறையா சொல்லி இருக்கணும் இல்ல. எங்க உதவி இயக்குனரும் வரல, அதான் அமைச்சர் மூர்த்தி சார் ரொம்ப சங்கடப்பட்டு போனாரு. எங்க செயல் அலுவலர் ஜெயலட்சுமிக்கு நிறைய பிரச்சனை இருக்கு போல. எப்ப பாத்தாலும் வீட்ல பிரச்சனை, வெளியே கடன் பிரச்சனை, எனக்கு மூத்த அரசியல்வாதிகளை தெரியும், டைரக்டரையும், செக்கரட்டரியும் தெரியும்னு பல நபர்கள் கிட்ட எங்க துறை பணியாளர்களிடம் பணியிடம் மாறுதல், பதவி உயர்வுகள் வாங்கித் தரேன்னு பல லட்சங்களை பெற்றுக் கொண்டு ஏமாத்திட்டு வர்றதாகவும் கேள்விப்பட்டோம். எங்க அமைச்சர் மூர்த்தி சார் ரொம்ப நல்லவரு, அவர் ஏரியால இப்படி மதிக்காத ஒரு செயல் அலுவலர் இருக்காங்கன்றதை எங்கன்னால பொறுத்துக்கவும், ஏத்துக்கவும் முடியல என்றனர் வெறுப்பாக.

மேலும் குற்றச்சாட்டுகள் குறித்து, அலங்காநல்லூர் பேரூராட்சியின் சேர்மன் ரேணுகா ஈஸ்வரிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்தோம், எங்களது அழைப்பை எடுக்க மறுத்ததால் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் சில இடம் பேசினோம்.

ஜெயலட்சுமி
அலங்காநல்லூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெயலட்சுமி பேசிய ஆடியோ
இங்க உள்ள செயல் அலுவலர் ஜெயலட்சுமியும், மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனரும், மாவட்ட கலெக்டர் மேடத்துக்கு அலங்காநல்லூரில் இப்படி ஒரு நிகழ்ச்சி இருக்குன்னு தெரியப்படுத்தலைன்னு நினைக்கிறோம். இந்த செயல் அலுவலர் ஜெயலட்சுமி யாரையும் மதிக்கிறது இல்ல. அதனாலதான் அமைச்சர் அண்ணன் கிட்டையும், கலெக்டர் அம்மா கிட்டயும் திட்டு வாங்கினாங்க. செயல் அலுவலரின் செயல் கண்டிக்கத்தக்கது தான் என்றனர் பொறுப்பாக.
நம் தொடர்புக்கு வந்த அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி பேசி ஆடியோ….
பல்லாயிர பிரச்சனைகளை மனதில் சுமந்து கொண்டு அமைச்சர், அதிகாரிகளையும் மதிக்காமல் மதுரை அலங்காநல்லூர் செயல் அலுவலர் ஜெயலட்சுமியின் செயல் வருத்தம் அளிக்கிறது என்று அலங்காநல்லூர் பொதுமக்கள் பேசி வருவது தான் நிச்சயம்.