மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 125 பேர்(பெண்கள் 15) உட்பட. குஜராத் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் இருந்து கன்னியாகுமரி வரையிலான கலாச்சாரம் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பயணம்,கடந்த(மார்ச்_7)ம் தேதி கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த பன்மொழி பணியாளர்கள் இந்த சைக்கிள் பயணத்தில் பங்கேற்றுள்ளார்கள். சைக்கிள் குழுவினரின் மருத்துவ உதவிக்காக. மருத்துவர்கள், தாதியர்கள் ,உதவியாளர்கள் அடங்கிய குழு, பாதுகாப்பு வாகனம் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ். மற்றும். தேவைப்படலாம் என்ற எதிர் பார்ப்பில் கூடுதலாக 25_சைக்கிள்களை உடன் எடுத்து வருகின்றனர்.
சைக்கிள் குழுவினர் எதிர் வரும் 30_ம் தேதி இரவு கன்னியாகுமரி வந்தடைவார்கள்.
ஏப்ரல் 1_ம் தேதி கன்னியாகுமரியில் மிகப் பெரிய நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. மத்திய அமைச்சர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகள் பங்கேற்க இருப்பதாகவும்

கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் மற்றும் விவேகானந்தா கேந்திரா வில் உள்ள தியாகச் சுவர் பகுதிகளை பார்வையிட்ட தென்மண்டல மத்திய பாதுகாப்பு படையின் ஐஜூ சரவணன் செய்தியாளர்கள் இடம் தெரிவித்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உள்ள அனைத்து ஏற்பாடுகள். உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவிருப்பதை உணர்த்துகிறது (அதிகார பூர்வமாக தகவல் இல்லை).