• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் – கணித ஆசிரியர் தற்கொலை

Byமதி

Nov 25, 2021

கரூரில் பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில், மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.