• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பைப்ப திறந்தா… 500 ரூபாய் நோட்டா கொட்டுது!

Byமதி

Nov 25, 2021

கர்நாடகா மாநிலம் முழுவதும் ஊழல் தடுப்புப் பிரிவு நேற்று முழுவதும் 68 இடங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 அரசு அதிகாரிகளைக் குறிவைத்து, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக ஒரே நேரத்தில் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியது.

அப்போது கலபுர்கியில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர் சாந்தப்ப கவுடா வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கட்டுக்கட்டாக பணத்தை வீட்டில் உள்ள பைப்புகளில் ஒளித்து பாதுகாத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 40 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பல கிலோ தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், கடக் மாவட்டத்தில் விவசாயத் துறையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரியான டி.எஸ்.ருத்ரேஷப்பா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நகைகள் மற்றும் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மங்களூரு, பெங்களூரு, மண்டியா மற்றும் சில மாவட்டங்களில் உள்ள 15 அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 8 எஸ்பிக்கள், 100 அதிகாரிகள் மற்றும் 300 ஊழல் தடுப்பு படை ஊழியர்கள் தலைமையிலான குழுக்கள் சோதனை நடத்தினர்.