• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா ஆண்டு

BySeenu

Dec 30, 2024

பி.எஸ்.ஜி.பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா ஆண்டு. பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ந்தனர்.

கோவை பி.எஸ்.ஜி.பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து நினைவுகளை பகிர்ந்தனர்.

கோவையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி.கல்வி குழுமங்கள் சார்பாக பல்வேறு துறை சார்ந்த கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பீளமேடு பி.எஸ்.ஜி.டெக் வளாகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 99 ஆம் ஆண்டு வரை டிப்ளமோ பயின்ற முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.

பி.எஸ்.ஜி.தொழில்நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அலுமினி பேட்ரோன் பிரகாசன், பி.எஸ்.ஜி.கேர் இயக்குனர் ருத்ரமூர்த்தி,
பி.எஸ்.ஜி.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ், அலுமினி பொது செயலாளர் அரசு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

அப்போது இது போன்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் கல்லூரியின் வளர்ச்சிக்கு தேவை எனவும், மேலும் விரைவில் நடைபெற உள்ள பாரம்பரியமிக்க பி.எஸ்.ஜி. குழுமங்களின் நூற்றாண்டு விழா,கல்வி குழுமங்களின் 75 வது பவள விழா என தொடர்ந்து நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் பி.எஸ்.ஜி.கல்வி குழுமங்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். இந்நிகழ்ச்சியை பாலிடெக்னிக் கல்லூரியில் 96 ஆம் ஆண்டு பயின்ற முன் னாள் மாணவர்கள் ஜெயகுமார்,ஜான் டேனியல், வடிவேலன், சிவக்குமார், ஜூடித், பிரியா, செங்குட்டுவன், ஆனந்தராஜ், ரகுபதி, சுவாமிநாதன் உள்ளிட்ட மாணவர்கள் பலர் ஒருங்கிணைத்தனர்.

விழாவில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலும் இருந்தும் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பலர் அவர்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.