அய்யா வழியை,ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சிகளை போல் உடைக்க முயற்சிக்கிறார் என பூஜித குரு வழக்கறிஞர் பால ஐனாதிபதி குற்றம் சாட்டி உள்ளார்.
தென் தமிழகத்தில் அதுவும் குமரி மாவட்டத்தில் ஒரு தொன்மையான வழிபாட்டை போதித்து அதற்கு அகிலத்திரட்டு என்ற நூலையும் அருளியவர் முகத்துக்குட்டி என்னும் வைகுண்டர். அய்யா வழி பக்தர்கள் மனம் புண்படும் நிலையில் அய்யாவழியை பின்பற்றுபவர்களில் பிழைப்பிற்காக இங்கே சில அமைப்புகளை கையடக்கி கொண்டுள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆண்டுக்கு முன் தலைமை பதிக்கு வந்தார். அய்யா வழி பாட்டு முறை, வழி பாட்டில் தீண்டாமை இருக்கக்க கூடாது என்பதை உணர்த்தவே அனைவரின் நெற்றியில் திருநாமத்தை தொட்டுப் பேடவேண்டும் என்பதை உருவாக்கினார்.

சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் யாரும் இல்லை என்ற அய்யா போதித்த நடைமுறையை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சொன்னேன். ஆலய தரிசனம் முடிந்தபின் இங்கே கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசிய தமிழக ஆளுநர் அய்யா பற்றிய அவரது பார்வையை ஆங்கிலத்தில் பேசினார்.
தலைமை பதிக்கு ஆர்.என்.ரவியின் வருகையின் நோக்கம். நான் ஒரு திராவிட அரசியல் சித்தாந்தத்தை கடந்த 50_ஆண்டுகளாக பின்பற்றி வருகிறேன், அந்த இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவன். திமுக வில் இப்போது நான் எந்த பொறுப்பிலும் இல்லாததால், என்னை மூளை சலவை செய்து ஆர்.என்.ரவி இருக்கும் அமைப்பிற்கு அழைத்து செல்வதே அவரது நோக்கமாக இருந்தது. நான் அவரின் கருத்துக்கு உடன்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் எவ்விதமான முன் அறிவிப்பும் இன்றி வருகை தந்த தமிழக ஆளுநர்.அண்மையில் அய்யா தாங்கல்களில் இருந்து எடுத்த 108_நாமத்தையும், முந்திரி பதத்தையும், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலிக்கு எடுத்து செல்வதாக சொல்லப்பட்ட நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
அய்யா அயோத்தி பட்டணம் அழியக் கண்டேன் என பாடிவைத்துள்ளார். அய்யாவின் சிந்தனைக்கு சற்றும் பொருந்தாத அயோத்தி ராமர் கோவிலிக்கு எடுத்து செல்வதாக சொல்வது யாரை ஏமாற்ற.?

சென்னையில் ஒரு நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மொழி வழி மாநிலங்களை உருவாக்கியது தவறு என்று சொல்லும் அதிகாரத்தை யார் கொடுத்தது. ஆளுநர் பதவி காலம் முடிந்து ,நீட்டிப்பும் கொடுக்காத நிலையில்,தொங்கி கிட்டு இருக்கும் இவர்
மூச்சுக்கு முன்னூறு முறை சனதனம், சனதனம் என்பவர் சனதனம் என்றால் என்ன வென்று சொல்லவேண்டும்.
அரசியல் கட்சிகளை உடைப்பதுபோல், அய்யாவழியையும் உடைக்க நினைக்கிறார் ஆளுநர் ரவி. தமிழர்கள் இந்தியை எதிர்க்க கூடாதாம். இந்தியை, சமஸ்கிருதத்தை ஆதரிக்க வேண்டுமாம்.

ஆளுநர் ஆர்.என். ரவி இதுவரை அரசியல் பேசிக்கொண்டிருந்தார். இப்போது மதவாத பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். தமிழக அரசின் வரிப்பணத்தில் இவர் தனிப்பட்ட பிரச்சாரம் செய்வதை கண்டிப்பதாக, பூஜித குரு வழக்கறிஞர் பால ஐனாதிபதி தெரிவித்தார்.