முத்துலாபுரம் ஊராட்சியில் உரிய அனுமதியின்றி மது விற்பனை, சீட்டாட்டம், நடைபெற்று வரும் மனமகிழ் மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா முத்துலாபுரம் ஊராட்சியில் உரிய அனுமதியின்றி மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருவதாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
சின்னமனூர் இரசக்கநாயக்கனூர் சாலையில் முத்தலாபுரம் விளக்கில் உரிய அனுமதியின்றி உரிய பாதுகாப்புகள், போதிய இடவசதி இன்றி மணமகிழ் பன்றம் என்ற (ரெக்கரேஷன் கிளப்)செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த மணமகழ் மன்றத்தில் மது அருந்துதல், சீட் ஆட்டாம் உள்ளிட்டவை மட்டுமே இந்த மணமகழ் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் மணமகழ் மன்றத்திற்கு ஊராட்சி நிர்வாகம் உரிய அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே உடனடியாக உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் மணமகழ் மன்றத்தில் மது விற்பனை, சீட்டாட்டம் நடைபெற்று வருவதை தடுக்க வேண்டும் என முத்துலாபுரம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.