தமிழ் நாடு பிளக்ஸ் போர்ட் அசோசியேஷன் உதவியுடன்.”பசியில்லா தமிழகம்” என்ற அமைப்பின் சார்பில். சாலை ஓர ஆதரவு அற்ற பாதுகாப்பு இல்லாத ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உதவும் அமைப்பான பசியில்லா தமிழகம் அமைப்பின் தலைவர் முகமது அலி ஜின்னா தலைமையில் கடந்த (அக்டோபர்_23)ம் நாள் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தீபாவளி அன்பளிப்பு என்ற வகையில் சாலை ஓர ஆதரவு அற்ற மக்களுக்கு புத்தாடை, இனிப்பு, புதிய செருப்பு இவற்றை வழங்கி திட்டத்தை தொடங்கினார்.

சென்னையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாலை ஓர ஆதரவு அற்ற மக்களை சந்தித்து உதவிய. பசியில்லா தமிழகம் அமைப்பினரின் நிறைவு விழா கன்னியாகுமரி தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவு மண்டபம் முன்பு. பசியில்லா தமிழகத்தை சேர்ந்த பஷிரஷ்மத் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்.

இந்த நிகழ்வில் சேலம் குட்டி பிரகாஷ் (யூ டீயூப்பர்) குமரியை சேர்ந்த கெய்சர்கான், அகமகதுஷாலி,மாகின் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.










