• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில இளைஞர்கள்

BySeenu

Nov 4, 2024

ராணுவத்திற்கு தேர்வு எழுத, கோவை ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் குவிந்தனர்.

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள்,கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு இன்று முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இருந்து பலர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 174 ராணுவ வீரர்கள்,50 கிளார்க் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகின்றன.

இன்று முதல் வருகின்ற நவம்பர் 10-ம் தேதி வரை இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் எனவும் நாளொன்றுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு தேதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோவை நோக்கி படையெடுத்துள்ளனர்.மேலும் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வருகை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

இன்னும் பத்து நாட்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில் வருகின்ற நாட்களில் அதிகளவில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதியில் சேர்ந்தவர்கள் கோவை நோக்கி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வுக்கு வரும் இளைஞர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்துகின்றனர்.

மேலும் அவர்களுக்கு தங்கும் வசதி,உணவு வசதி,கழிப்பறை வசதி என அடிப்படை வசதிகளை கோவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே நேற்று தேர்வு வந்தவர்களுக்கு போதிய வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.