நாகர்கோவிலில் அன்னை இந்திரா காந்தியின் 40_ ஆண்டு நினைவு தினத்தில் அஞ்சலி. மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர். சிவகுமார் தலைமையில், முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 40-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள டெரிக் சந்திப்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னால் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் பிரைட் முன்னாள் வட்டாரத் தலைவர் வைகுண்ட தாஸ் வர்த்தக காங்கிரஸ் ஆலோசகர் முகைதின் சாகுல் ஹமீது மாவட்டத் துணைத் தலைவர்கள் சுந்தர், ரெத்னசாமி, ராமமூர்த்தி, தலைவர் ஆரோக்கியராஜன் மாவட்ட பொதுச் செயலாளர் பால்டேனியல் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லின், வட்டாரத் தலைவர்கள் முகமதுசாபி, விஜிலா அரசு, ஆனந்த், பிராகஷ், கிறிஸ்டோபர் மற்றும் சேவியர் ஜார்ஜ், சேம்சன் துறை, கெவின் ராமன், லெட்சுமணன், விஸ்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.