குமரி காப்புக்காடு பகுதியில் இருந்து தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்ற பேருந்து தேனி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த 15 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி!
கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியில் இருந்து 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு, தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு இரண்டு சுற்றுலா பேருந்துகள் சென்றுள்ளன.
அதில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள குன்னூர் பகுதியில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தற்போது வரை மாணவ, மாணவிகள் காயம் அடைந்துள்ள சரியான தகவல் கிடைக்கவில்லை.