இந்தியாவின் தென்கோடி முனை பகுதிக்கு “கன்னியாகுமரி” என பெயர் வரக்காரணம், இங்கு கோவில் கொண்டிருக்கும் கன்னி பகவதியம்மன்.
இந்தியாவின் அனைத்து மாநிலத்தின் மக்களும் மொழி, கலாச்சாரம், நாகரீகம் எல்லாம் கடந்து,கடல் கடந்த நாடுகளில் உள்ள மக்களும் சுற்றுலா பயணிகளாக வருபவர்கள். தேவி கன்னி பகவதியம்மனை வணங்கி காணிக்கை செலுத்துவது வாடிக்கை.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் பல்வேறு இடங்களில் மொத்தம் 17_உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் 3_ மாதத்திற்கு ஒரு முறை திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்படும். காணிக்கையில் வெள்ளி, தங்கமும் உள்ளடக்கியது.

குமரி மாவட்டம் அறநிலையத்துறை அறங்காவலர் குழுவின் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் முன்னிலையில் இன்று காணிக்கைகள் எண்ணப்பட்டது. இந்த பணியில் இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் தங்கம் ஆகியோர் முன்னிலையில், கோயில் ஊழியர்கள், ஆதிபராசக்தி மன்றத்தினர், கன்னியாகுமரி மற்றும் அடுத்துள்ள கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகளும் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டார்கள்.

நாணயம் மற்றும் பணத்தாள்கள் என மொத்தம் 20_லட்சத்து1,307 காணிக்கையாக வந்திருந்தது இத்துடன் வெள்ளி 323 கிராமமும், தங்கம் 5,420 கிராமும் இருந்தது.
உண்டியல் எண்ணும் பணியை ஆய்வாளர் சரஸ்வதி, கோவில் மேலாளர் ஆனந்த் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
