பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகை எல்லாம் படைத்தவளோ என்பதைப் போல திண்டுக்கல்லில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி.
திண்டுக்கல்லில் முதல்முறையாக திருநங்கைகளுக்காக நடைபெற்ற அழகி போட்டியில் தேனியைச் சேர்ந்த ஹேமா திண்டுக்கல் டிரான்ஸ் குயின் 2024 பட்டத்தை தட்டிச் சென்றார்.
திண்டுக்கல் தனியார் ஹோட்டலில் கோல்டன் லோட்டஸ் பவுண்டேஷன் அன்பே கடவுள் அறக்கட்டளை சார்பில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், மதுரை ,கரூர், திருச்சி ஆகிய ஆறு மாவட்டங்களை சேர்ந்த திருநங்கைகள் 15 பேர் கலந்து கொண்டனர். நடையழகு, உடை அழகு, முக பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் முதல் மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் தேனியை சேர்ந்த ஹேமா முதல் பரிசு பெற்று மிஸ் திண்டுக்கல் டிரான்ஸ் குயின் 2024 பட்டம் பெற்றார். இரண்டாம் இடத்தை தேனியைச் சேர்ந்த சுருதி மூன்றாம் இடத்தைதேனியைை சேர்ந்த தீக்ஷனா ஆகியோர் இவர்களுக்குகோப்பைகள் மற்றும் மடல்கள் வழங்கப்பட்டன. முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு தலையில் கிரீடம் அனிவிக்கப்பட்டது. திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கையர் மற்றும் பலர் கலந்து கொண்டு போட்டிகளை கண்டு கலித்தனர். மேலும் போட்டிகளை உற்சாகப்படுத்தும் வகையில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.