மகளிருக்கான 33% இடஒதுக்கீடை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி, நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து பார்வதிபுரம் ராஜீவகாந்தி சிலை வரை மத நல்லிணக்க பேரணி நாகர்கோவில் மாநகர மகிளா காங்கிரஸ் சார்பில், மாநகர தலைவி சோனிவிதூலா தலைமையில் நடைபெற்றது . இதில் தமிழ்நாடு மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி சைய்யத் ஹசீனா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். மேலும் பிரின்ஸ் MLA, திருநெல்வேலி எம்பி ராபர்ட்பூருஸ், கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி வதனநிஷா, மேற்கு மாவட்ட தலைவி சர்மிளா ஏஞ்சல், மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.