கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோர சுற்றுலா பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் கன்னியாகுமரி லைட் ஹவுஸ் முட்டம் லெமோரியா கடற்கரை சொத்தவிளைசங்கு கடற்கரை பகுதிகள் முக்கியமானது.
மீனவ கிராமங்கள் என்பது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 47 மீனவகிராமங்கள், இவை தவிர மீன்பிடித் துறைமுகங்களான சின்னமுட் டம், தேங்காபட்டினம், குளச்சல் இத்துடன் குளச்சலில் இருக்கும் தனியார் துறைமுகம். துறை முகங்கள் அனைத்திலும் மொத்தமாக உள்ள 1000_க்கு அதிகமான இயந்திர விசைப்பிடி படகுகள்.
சட்டென மாறியது காலை நிலை என்பது போல். நேற்று (ஆகஸ்ட்4)ம் தேதி ஆடி அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கன்னியாகுமரியில் கடலில் இறங்கி புனித நீராடிய நிலையில். 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
இன்றுமுதல் (ஆகஸ்ட.5,6,7) தேதிகளில் மூன்று நாட்கள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். குமரியில் உள்ள முக்கிய சுற்றுலா கடற்கரை பகுதிக்கு எவரும் செல்ல வேண்டாம் என குமரி ஆட்சியர் அழகுமீனா எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டதுடன். அதில் வெளிபடுத்தி உள்ள செய்திக்குறிப்பில், கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு,கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும்.

கடற்கரையில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வரையிலும் சில நேரங்களில் 55 கி மீ. வேகத்துக்கு அதிகமாக காற்று வீசும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுவித்துள்ளதாக ஆட்சியர் அழகு மீனா அவரது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆட்சியரது அறிவிப்பை தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் காவல்துறை, கடலோர காவல்படை, சுற்றுலா காவலர்கள் கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.





