தக்கலையில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூ10 லட்சத்தில் சத்துணவு கூடத்தை குமரி எம். பி விஜய்வசந்த் திறந்து வைத்தார்.
தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி 2023-2024 மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டி பணிகள் முடிந்ததையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள், காமராஜர் பிறந்த நாள் மற்றும் தமிழ் இலக்கிய மன்ற விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றி பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜய்வசந்த் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவிகளின் பேண்ட், வாத்தியம் முழங்க பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட பொதுச்செயலாளர் பால் டி சைலஸ் மற்றும் தாளாளர் சகோதரி எஸ்பட் சித்ரா, தலைமையாசிரியை சகோதரி லீமா ரோஸ்லி மற்றும் அருட் சகோதரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

