• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கருடன் திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது

BySeenu

May 19, 2024

இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நடிகர் சூரி கோவை ப்ரோசோன் மாலில் இப்படம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காமெடியனாக பார்க்கப்பட்ட சூரி விடுதலை திரைப்படத்திற்கு பிறகு வேறு மாதிரியான ஒரு ஜானரில் இருந்திருப்பேன் அதே போல் இந்தப் படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் இருந்திருப்பேன் என நம்புகிறேன் என்றார். கதாநாயகனாகவே தற்பொழுது தனக்கு வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் காமெடியனாக வாய்ப்புகள் தற்போது வரவில்லை என்றார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் செய்திருப்பதாக கூறினார். விடுதலைப் படத்தில் இருந்தது போலவே இந்த படத்திலும் சிறிது கஷ்டங்கள் அனுபவித்ததாக தெரிவித்த அவர் அதற்கான பலன் நிச்சயமாக கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
காமெடி கதாபாத்திரங்களை நடிக்கும் பொழுது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்து விட்டு சென்று விடுவோம் எனவும், தற்பொழுது கதாநாயகனாக நடிக்கின்ற போது மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி இருப்பதாக உணர்கிறேன் என்றார். கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மெனக்கெட வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தான் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்வதாகவும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருப்பதாகவும் தனக்கு இன்னொரு விடுதலை படமாக இது அமையக்கூடும் என்று கூறி இருப்பதாகவும், நடிகர் சூரி தெரிவித்தார். துரை செந்தில் இயக்குனரிடம் படம் செய்ய வேண்டும் என்று தானே தான் ஆசைப்பட்டதாக கூறினார். விடுதலை திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் கதாநாயகனாக இருந்த நிலையில், அதிலிருந்து வெளியில் வரும் பொழுது தனக்கு ஒரு மாஸ் என்ட்ரி வைத்து விட்டால் ஒரு பக்கம் தான் தனது வண்டியை விட வேண்டும் என கூறினார். சினிமாவில் எப்பொழுதும் Empty என்பதே இருக்காது என குறிப்பிட்ட அவர் தொடர்ந்து அந்தந்த இடத்திற்கு ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என தெரிவித்தார்.

மேலும் சினிமா அந்த இடத்திற்கு ஒரு ஆளை தேர்வு செய்து விடும் எனவும் கூறினார். தான் கதாநாயகனாக நடிக்கும் பொழுது யார் காமெடியன் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார்களோ அவர்களை கட்டாயமாக தேர்வு செய்வேன் எனவும் கூறினார். காமெடி நடிகர்கள் சிலர் வறுமைக்கோட்டில் இருப்பது குறித்தும் சிலர் உயிரிழந்தது குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்து வருகிறார்கள் எனவும், சில சமயங்களில் இயற்கை காரணங்களிலினால் மரணிப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் தான் எந்த இயக்குனர் அழைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், புதிய இயக்குனர்கள் கூட உலக அளவில் திரும்பி பார்க்கின்ற அளவிற்கு படங்களை எடுப்பதாக தெரிவித்த அவர், சிறிய இயக்குனர் தான் என்னை உலக அளவில் கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டார். தல தளபதி கவின் மணிகண்டன் என்று எதிர் எதிர் நாயகர்கள் இருப்பதைப் போல் சூரி சந்தானம் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பியதற்கு உங்களுடைய பார்வையில் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் எனவும் சூரிக்கு சூரி தான் என பதில் அளித்தார்.