கோவை யோவா யோகா அகாடமியின் மூன்றாவது ஆண்டு விழாவை முன்னிட்டு,
யோகாவில் உலக சாதனை புரிந்த கின்னஸ் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்றது.கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி.கடந்த பதிமூன்று வருடங்களாக யோகாவில் பல்வேறு உலக சாதனைகளை செய்துள்ள இவர்,அதே பகுதியில் யோவா யோகா அகாடமியை நடத்தி வருகிறார்.இந்நிலையில் யோவா யோகா அகாடமியின் மூன்றாவது ஆண்டு விழா கருமத்தம்பட்டி,கத்தோலிக்க தேவாங்கர் டிரஸ்ட் அரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக,கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன்,கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன்,கருமத்தம்பட்டி ரோட்டரி சங்க தலைவர் பிரபு,நிகழ்ச்சி தொகுப்பாளர் அக்குபஞ்சர் நிபுணர் மோகனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில்,யோவா யோகா அகாடமியில், பயிற்சி பெறும் ,திருச்சி,கோவை,வேலூர், ஈரோடு,சிவகங்க்க என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 34 யோகா சாதனையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஐந்து வயது முதல் பதினாறு வயது வரையிலான கலந்து கொண்ட அனைவரும் யோகா சாதனையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். மாநில, தேசிய, சர்வதேச அளவில் யோகாவில் பல சாதனைகள் புரிந்த வீரர்,வீராங்கனைகள் தாங்கள். வாங்கிய பதக்கம்,கோப்பை,மற்றும் சான்றிதழ்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனால் அரங்கம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் நடுவே யோகா சாதனையாளர்கள் தங்களது பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர். குறிப்பாக உலக சாதனை நிகழ்வாக செய்த பல்வேறு கடினமான ஆசனங்களை ஒரே இடத்தில் செய்தது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஒரே இடத்தில் யோகா சாதனையாளர்கள் ஒன்று கூடிய இந்நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடதக்கது.





