• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரி வாரியூரில் புராதன நூலகம் புதுப்பித்தல்

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்திலே குமரி மாவட்டத்தில் நூலகங்கள் அன்றைய மக்களின் பொது அறிவுக்கு நாகர்கோவில் ஒரு பொது நூலகம் இருந்துள்ளது.

கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் , அஞ்சுகிராமத்தின் அருகில் வாரியூர் பகுதியில் அந்த பகுதியில் 1952-ம் ஆண்டில் பிள்ளைமார் சமுகத்தை சேர்ந்தவர்கள் முயற்சியில். கப்பலோட்டிய தமிழன் வ.வு. சிதம்பரம் பெயரில் ஒரு ஓலை குடிசையில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டது.

கால ஓட்டத்தின் மத்தியில் ஓலை குடிசை ஓட்டு கட்டிடமாக மாறியபோது. அதன் அருகில் ஒரு தபால் நிலையமும் இணைந்தது.

அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் அவரது சட்டமன்ற நிதியில் இருந்து ரூ.15-லட்சத்தில் ஓட்டுக் கட்டிடம், வலுவான கான்கிரீட் கட்டிடமாக மாறியபோது, காணும் பொங்கல் தினத்தில் வாரியூரில் ஊர் மக்கள் ஒன்று கூடிய நிகழ்வில். சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலையில். நூலகத்தை 70_ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய குடும்பத்தின், இன்றைய வாரிசும்,வாரியூர் வெளிநின்ற விநாயகர் டிரஸ்ட் தலைவர் வாரியூர் நடராஜன் தளவாய் சுந்தரம்,பசலியான் நசரேயன் மற்றும் ஊர்மக்கள் முன்னிலையில் வா ரியூர் நடராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ, துணைத் தலைவர் காந்தி ராஜ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம், தபால் துறை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் நூலகத்திற்கு ரூ.15_லட்சம் நிதி உதவி வழங்கிய தளவாய் சுந்தரம் நிதி அளித்தமைக்கு வாரியூர் பகுதி மக்கள் சார்பில் தபால் துறையில் வாழும் மனிதரின் செயலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.600.,கட்டணம் செலுத்தி “மைஸ்டாம்ப், செலுத்தினால் பயன் பாட்டில் இருக்கும் ஸ்டாம்புடன் சிறப்பு “மை ஸ்டாம்ப்” தளவாய் சுந்தரத்தின் நிழல் படத்துடன் ஸ்டாப் விழாவில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில்
அந்த பகுதி பொது மக்களும் பங்கேற்றனர்.