• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரி சந்தையடியில் சமத்துவ பொங்கல் விழா.., ஆட்சியர் ஸ்ரீதர் குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உடன் இணைந்து பொங்கல் கொண்டாடினர்…

கன்னியாகுமரியை அடுத்த ஒரு அழகிய கிராமம் சந்தையடி. இங்கு தமிழர் திருநாள் அன்று, படிப்பகத்தின் 66_வது ஆண்டு விழாவையும், 57-வது சமத்துவ பொங்கல் விழாவையும் ஊர் மக்கள் மற்றும் அல்லாது தமிழக சுற்றுலா துறை விருந்தினர்களாக அழைத்து வரும் பன்னாட்டு மக்களும், சந்தையடி ஊர் மக்களும் இணைந்து இவ்வாண்டு கொண்டாடிய விழாவில், குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் குடும்பத்துடன் பங்கு பெற்று, பன்னாட்டு சுற்றுலா பயணிகளுடன் இணைந்து பொங்கல் கொண்டாடினார்கள்.

இந்த விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் இ.கா.ப., நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் இ.ஆ.ப, கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் அருட்பணி. உபால்ட், சுவாமி சைதன்யானந்த், இமாம் பைசுர்ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் சிலம்பம், உட்பட வீர விளையாட்டுகளை சிறுவர்களும், சிறுமிகளும் சிறப்பு விருந்தினர்கள் முன் நிகழ்த்தி காட்டினர். கடந்த பள்ளி ஆண்டில் 10 மற்றும்+ 1,+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி, ஆட்சியர் ஸ்ரீதர் பாராட்டு சான்றுடன் பரிசும் வழங்கினார். அனைத்து நிகழ்வுகளையும் ஒன்றிணைத்து முன்னாள் அகஸ்தீசுவரம் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் வழி நடத்தினார்.