• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை தமிழ் அமைப்புகள் சார்பில், மலர் தூவி மரியாதை…

கன்னியாகுமரியில் 2000_ம் புத்தாயிரம் ஆண்டில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் உலக தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள்,தமிழகத்தை சார்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகளின் சான்றோர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இரண்டு நாட்கள் என கன்னியாகுமரி விழாக்கோலம் பூண்டு இருந்த அந்த நாட்கள் உருண்டோடி ஆண்டுகள் இன்று 24 யை தொட்டுவிட்டது.

பத்தாயிரம் ஆண்டின் முதல் நாளில் விழா எடுத்த தமிழக அரசு அதன் பின். திருவள்ளுவர் சிலை நிறுவிய தினத்தை கடந்த 23_ஆண்டுகளாக. திமுக, அதிமுக அரசுகள் கண்டு கொள்ளாத நிலையில், குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் நிறுவனர் முனைவர்.பத்மநாபன் திருவள்ளுவர் சிலை நிறுவிய 2001_ம் ஆண்டு முதல் ஜனவரி ஒன்றாம் நாளில் திருவள்ளுவர் சிலை பாதத்தில் மலர் தூவி திருவள்ளுவர் சிலை நிறுவன தினத்தை கடமை உணர்வுடன் சிறப்பித்து வந்த நிலையில், குமரி மாவட்டத்தில் உள்ள தமிழ் அன்னை தமிழ் சங்கம்.
கவிதை உறவு தமிழ் வானம் திருவள்ளுவர் அறக்கட்டளை உட்பட பல்வேறு அமைப்புகள், திருவள்ளுவர் சிலை நிறுவன தினத்தை தடையின்றி ஆண்டு தோறும் கொண்டாடிய போதும் அனைத்து தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து அரசுக்கு வைக்கும் கோரிக்கை. திருவள்ளுவர் சிலை நிறுவிய தினத்தை தமிழக அரசின்
சார்பில் சிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆண்டுக்கு,ஆண்டு கோரிக்கை வைத்த வண்ணமாக இருக்கிறனர்.

கன்னியாகுமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை பாறைக்கும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டமத்திற்கு இடைப்பட்ட கடற்பரப்பில் தற்போது பிளாஸ்டிக் இளை பாலம் அமைக்கும் பணி நடப்பதால், கடந்த இரண்டு மாதங்களாக திருவள்ளுவர் சிலை பாறைக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை.

திருவள்ளுவர் சிலை நிறுவிய 24-ம் ஆண்டு தினத்தில். குமரியில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்பை சேர்ந்த 50_க்கும் அதிகமான பேர் திருவள்ளுவர் சிலை பாறைக்கு செல்ல, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தனிபடகில் சென்று வர அனுமதித்தது.

நாகர்கோவில் சட்டமன்ற பாஜக உறுப்பினர் எம்.ஆர். காந்தி, கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு மையம் பொதுச்செயலாளர் டாக்டர். நாகேந்திரன், டாக்டர்.சிதம்பரம் நடராஜன், தமிழ் அன்னை தமிழ் சங்கம் நெறியாளர் கண்ணன்,தமிழ் குழவி, வழக்கறிஞர்.வெற்றிவேல் என பலரும்.திருவள்ளுவர் சிலை பாதத்தில் மலர் தூவி 24_ம் ஆண்டை சிறப்பித்தனர்.

அடுத்து வருவது சிலை நிறுவிய 25_வது ஆண்டை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடவேண்டும் என நிகழ்வில் பங்கேற்ற அனைத்து தமிழ் அமைப்பின் சார்பில் பங்கேற்றவர்கள், செய்தியாளர்களிடம் கூட்டாக தொரிவித்தனர்.