• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெரிய மணலி கிராமத்தில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கொங்கு ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி..,

ByNamakkal Anjaneyar

Dec 31, 2023

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பெரிய மணலி கிராமத்தில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கொங்கு ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் கலந்து கொண்டு வள்ளியின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான நிகழ்ச்சிகளை பாடி, ஆடி காட்டினர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஆட்டத்தை ரசித்தனர்.

கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான ஒயிலாட்ட கலை அழியக்கூடிய தருவாயில் ஒரு சிலரின் முயற்சியால் அந்தக் கலை சில மாறுதல்களுடன் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. கொங்கு பாரம்பரிய கலையை கிராமங்கள் தோறும் கற்றுக் கொடுக்கும் விதமாக குழுக்களை தோற்றுவித்து ஆண்களுக்கும், பெண்களுக்கும், சிறுவர், சிறுமியர்களுக்கும் இந்த ஒயிலாட்டத்தை கற்றுக் கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பெரிய மணலி கிராமத்தில் இன்று வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. முளைப்பாரி எடுத்தும் முருகன் வள்ளி தெய்வங்களுக்கு அலங்காரம் செய்தும் வள்ளியின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான நிகழ்வுகளை பாடல்களாகவும், ஆடல் வடிவிலும் ஆடி பொதுமக்களுக்கு பக்தி பரவசத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறை பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என பலரும் ஆர்வத்துடன் கற்று அதனை அரங்கேற்றி வருகின்றனர். ஒயிலாட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் கரிய காளியம்மன் தேர் திருவிழா மாட்டு சந்தை திடலில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சிறுமிகள் இந்த வள்ளி கும்மி ஆட்டத்தை ஆடினர். கிராமிய மனம் கமலும் கும்மி பாட்டாக பாடி வள்ளி முருகன் திருமண காட்சிகளை விவரித்தனர். இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகன் வள்ளி திருமண கதையை கேட்டு ரசித்தனர். வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.