• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அம்ரீத் திட்டத்தில் சேர டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்..!

Byவிஷா

Dec 21, 2023

எஸ்.பி.ஐ வங்கியின் நிலையான வைப்பு நிதித் திட்டமான அம்ரீத் திட்டத்தில் சேர டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டிய வேலைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி எஸ்.பி.ஐ வங்கியின் நிலையான வைப்பு நிதி திட்டமான அம்ரீத் திட்டத்தில் சேர விரும்பினால் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைய வேண்டும். அதனைப் போலவே இந்த மாதம் இறுதிக்குள் வங்கியில் ஒப்படைத்து இருந்த லாக்கர் ஒப்பந்தத்தை வாடிக்கையாளர்கள் அனைவரும் வாங்கி திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் எஸ்பிஐ வங்கி தன்னுடைய பண்டிகை கால சலுகையின் கீழ் வீட்டு கடனில் 65 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி செய்துள்ள நிலையில் இந்த சலுகையும் டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக யுபிஐ ஐடி கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தவில்லை என்றால் உடனடியாக பரிவர்த்தனை செயல்முறையை முடிக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு உங்களது யுபிஐ ஐடி செயலிழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.