• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்பணர்வு பிரச்சாரம்..!

ByP.Thangapandi

Nov 8, 2023

உசிலம்பட்டி நகர் காவல் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு திருட்டு குற்றம் குறித்து ஆட்டோவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் துறையின் சார்பில் நகர் பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் ஆட்டோவில் ஒலி பெருக்கி வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தீபாவளியை முன்னிட்டு உசிலம்பட்டி தேவர் சிலை, தேனி ரோடு, மதுரை ரோடு, பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு சாலை மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் சென்று வீடுகளில் வைத்துள்ள பணம், நகைகளை வங்கிகளில் வங்கி கணக்கில் செலுத்தி வைக்க வேண்டும். பெண்கள் நகைகளை பாதுகாப்பாக அணிந்து செல்லவேண்டும் எனவும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வைத்திருந்தால் காவல் துறைக்கு தகவல் அளிக்கவேண்டும் எனவும் தகவல் அளிக்கும் நபர்களின் பெயர்கள் மற்றும் எண்கள் பாதுகாக்கப்படும் எனவும் இதன் மூலம் குற்றசம்பவங்கள் தடுக்கப்படும் என விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.,
இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களிடையை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.