• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்து

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 k 6097 பதிவு எண் கொண்ட காரில் உதகையிலிருந்து மஞ்சூர் கிண்ணாக்கொரை பகுதிக்கு சுற்றுலா செல்வதற்காக வந்த பொழுது சாமராஜ் என்ற இடத்தில் திடீர் வாகனம் பழுதால் பிரேக் பழுது ஏற்பட்டு சாலை ஓர தடுப்புச் சுவரில் பலமாக மோதியதில் தலை கார் குப்புற கவிழ்ந்தது.காரில் பயணித்த நான்கு நபர்களையும் அவ்வழியே வந்த வாகனங்களில் உள்ள நபர்கள் ஓட்டுநர்கள் மீட்டு சாமராஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதால். சிகிச்சை அளிக்கப்பட்டது .மஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விரைந்து வந்த காவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்துக்கான காரணம் பற்றி சுற்றுலா பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டன. சுற்றுலா பயணிகள் வாகன விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது