கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுநெசலூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் இவருக்கு நரேஷ் என்ற (5) மகன் உள்ளார் . இவர் வேப்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். கோடை விடுமுறை என்பதால் வீட்டில் உள்ளார் . இன்று மாலை இவருடைய உறவினர் நரேஷை ஊருக்கு அருகில் உள்ள வயலுக்கு அழைத்து சென்று அங்கு நரேனின் பாட்டி விஜயா என்பவரிடம் விட்டு விட்டு வயலில் வேலை பார்த்து கொண்டு இருந்த போது, நரேஷ் வயல் அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்துள்ளார். பாட்டி விஜயா கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குளத்தில் விழுந்த நரேஷை மீட்டு அருகில் உள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு சென்ற வேப்பூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.