• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

27-வது தேசிய அளவிலான கார் பந்தயம்

BySeenu

Nov 18, 2024

27-வது ஜேகே டயர் தேசிய கார் பந்தய சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கார்கள் சீரிப்பாய்ந்தன.

பிரபல நிறுவனமான ஜே.கே டயர் நிறுவனத்தின் 27-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில் நடைபெற்றது.

எல்.ஜி.பி பார்முலா 4 போட்டியில் 15 சுற்றுகள் மற்றும் 20 சுற்றுகளில் இறுதிப்போட்டியில் எல்.ஜி.பி ஃபார்முலா 4 பிரிவில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இளம் வீரர் டிஜில் ராவ் சேம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.

இதே போல ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பைக்கான சேம்பியன்ஷிப் 10 சுற்று போட்டியில் பாண்டிச்சேரியை சேர்ந்த நவநீத் சேம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.

பிரபல ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம்,தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இன்றைய இறுதிப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கார் பந்தய வீரர்கள்,கார் பந்தைய ஆர்வலர்கள் என ஏராளமானோர் இன்றைய போட்டியில் பங்கேற்றனர்.