• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பல் மருத்துவ கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா

BySeenu

Jan 5, 2025

ஸ்ரீ இராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லுாரியின் 20வது பட்டமளிப்பு விழா
எஸ்.என்.ஆர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, மதுரை MSR பல்மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர்.ஆர்.பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் உயர்திரு ஆர்.சுந்தர்
தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் L.தீபானந்தன் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் 93 மாணவர்கள் இளங்கலை பட்டமும், 9 மாணவர்கள் முதுகலை பட்டமும் பெற்றனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 12 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. Overall Best outgoing student-க்கான தங்கப்பதக்கம் M.ஸாதிகா என்ற இளங்கலை மாணவிக்கு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் நிர்வாக அறங்காவலர் உயர்திரு. ஆர்.சுந்தர் அறக்கட்டளையின் நற்பணிகளையும், ஸ்ரீ இராமகிருஷ்ணா பல்மருத்துவ கல்லூரியின் சிறப்பையும், உயர்தர கல்வி மற்றும் பல்மருத்துவச் சேவை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்கள். சிறப்பு விருந்தினர் டாக்டர் திரு.ஆர்பிரகாஷ், பட்டம் பெற்ற இளம் பல்மருத்துவர்கள் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு பழக்கங்களும், நாம் செய்யும் செயல்களும் வெற்றிகரமாக அமைக்க உதவும். நாம் நல்லதொரு உறுதுணை கூட்டத்தை கொள்ள வேண்டும். ஆவை நாம் கீழ் விழும்போது துாக்கிபிடிக்கும். வளர்த்து வாழ்வில் வெற்றி பெற நாம் எப்போதும் பொருளாதாரத்தையும் முறைபடுத்திக் கொள்ள வேண்டும் என உரையாற்றினார். இவ்விழாவிற்கு ஸ்ரீஇராமகிருஷ்ணா பல்மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.