• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவை ரயில்நிலைய கழிவறையில் தங்கியிருந்த 17வயது சிறுமி மீட்பு..!

Byவிஷா

Jun 24, 2022

கோவை ரயில் நிலைய கழிவறையில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை மீட்ட ரயில்வே காவல் துறையினர் அவரை குழந்தைகள் பாதுகாப்பு நல சங்கத்தினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
கோவை ரயில் நிலைய கழிவறையில், 17 வயது சிறுமி ஒருவர் தங்கி இருப்பதை ரயில்வே காவல்துறையினர் நேற்று கண்டனர். அவரிடம் விசாரித்தபோது, ஆந்திராவில் இருந்து வேலை தேடி வந்ததாகவும், கோவை ரயில் நிலையம் வந்ததும், தன்னை அழைத்து வந்த நபர், தனியாக விட்டுச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார். தனக்கு பெற்றோர் யாரும் இல்லை என்றும், இரண்டு நாட்களாக உணவு ஏதும் உண்ணவில்லை எனவும் அந்த சிறுமி தெரிவித்தது காண்போரை கண்கலங்க வைத்தது. இதையடுத்து சிறுமியை பற்றிய விவரம், சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த சைல்டு லைன் ஊழியர்கள் சிறுமியை மீட்டு, கோவை உக்கடம் டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.