• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் நாடு திரும்பினர்

ByA.Tamilselvan

Oct 5, 2022

மியான்மரில் சட்ட விரோத கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை திரும்பினர். பல மணி நேரம் வேலை பார்க்க வைத்து தண்டனை கொடுத்ததாக நாடு திரும்பியவர்கள் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.
தாய்லாந்தில் ஐ.டி. வேலை எனக்கூறி அழைத்து செல்லப்பட்ட 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்கள், மியான்மர் நாட்டில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு சட்ட விரோத வேலைகளை செய்யக்கூறி துன்புறுத்தப்பட்ட அவர்களை மீட்க, நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், முதற்கட்டமாக மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட 13 தமிழர்கள் இன்று தாயகம் அழைத்து வரப்பட்டனர். தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவர்களிடம், குடிவரவுத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தமிழகத்தில் இருந்து சென்ற அதிகாரிகள் விளக்கம் அளித்து அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர்.