• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மீரா மிதுனுக்கு புத்தி பேதலிப்பா?… வாக்குமூலம் பெற போலீசார் எடுத்த அதிரடி முடிவு!..

By

Aug 16, 2021

பட்டியலினத்தவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் நேற்று முன் தினம் கேரளாவில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மீரா மிதுனை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மீரா மிதுனை கைது செய்ததில் இருந்தே போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. நேற்று சென்னை அழைத்து வரப்பட்ட போது கூட “தனக்கு சாப்பாடே கொடுக்கவில்லை என்றும், என் கையை உடைக்க போலீசார் முயற்சிப்பதாகவும்” கூச்சலிட்டார்.

அதன் பின்னர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற போதும், அந்த அறையிலிருந்து தொடர்ந்து மீரா மிதுன் கத்திக்கொண்டே இருப்பது வெளியில் கேட்டதாக கூறப்படுகிறது. மீரா மிதுனுக்கு நிஜமாகவே புத்தி பேதலித்துவிட்டதா? இல்லை விசாரணையில் இருந்து எஸ்கேப் ஆக இப்படி செய்து வருகிறாரா? என்ற சந்தேகம் காவல்துறைக்கு எழுந்துள்ளது. எனவே மீரா மிதுனை மன நல மருத்துவரிடம் காண்பித்து, விசாரணை நடத்த சைபர் க்ரைம் போலீசார் திட்டமிட்டுள்ளார்களாம். நீதிமன்றம், கமிஷனர் அலுவலகம் என எங்கு அழைத்துச் சென்றாலும் மீரா மிதுன் சொன்ன விஷயங்களையே திரும்ப, திரும்ப கூறி கூச்சலிடுகிறாராம். எனவே மீண்டும் மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குள் அவர் மன அழுத்தத்தால் இப்படி நடந்து கொள்கிறாரா? என மனநல மருத்துவரை வைத்து பரிசோதிக்க காவல்துறையினர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.