தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு “களத்தை தயார் செய்வோம் – 2026 வெல்வோம்” என்ற கோஷத்துடன் எஸ்டிபிஐ கட்சி நாடு முழுவதும் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நெல்லை மண்டலத்தின் சார்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் கூறியதாவது,

இந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், பூத் பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டிகளின் கட்டமைப்பின் முக்கியத்துவம் என்ன என்பன குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.
தேர்தல் பட்டியலில் பெயர்கள் நீக்கப்படுவது தொடர்பாக எஸ்ஐஆர் செயல்முறையில் உள்ள குளறுபடிகளை குறித்து எஸ்டிபிஐ கட்சி பலமுறை மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், தெளிவான பதில் வராததால் இதனை உச்ச நீதிமன்றத்தில் வழக்காக கொண்டு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் கூறினார். .
“பாரதிய ஜனதா கட்சி மத்திய ஆட்சிக்கு வந்த பிறகு, மத்திய அமைப்புகளை அரசியல் ரீதியாக பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் கூட அவர்களின் ஆதரவாக செயல்படுவது போன்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிஹாரில் நடந்த ஆய்வில் பல்வேறு குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தமிழகத்தில் அதே முறை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதால் அதனை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம்,” என்றார்.

விஜய் தலைமையிலான கட்சிக்கு மக்களிடையே உருவாகியுள்ள ஆதரவு குறித்து அவர்கள், “அவர் நடிகர் என்பதாலேயே ஒரு தோற்ற ஆதரவு இருக்கலாம்; ஆனால் அது வாக்குகளாக மாறுமா என்பது தேர்தல் முடிவுக்குப் பின்னரே தெரியும்,
கரூர் சம்பவம் குறித்து அவர்கள், “அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது; அதிகாரிகள் தடை விதித்தனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. சிபிஐ விசாரணையின் பின்னர் உண்மைகள் வெளிவரும்,”
திமுக ஆட்சியைப் பற்றிக் கருத்து தெரிவித்த அவர், “நான்கரை ஆண்டுகளில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும், சிறுபான்மை சமூக இடஒதுக்கீடு 3.5 சதவீதத்திலிருந்து அதிகரிக்கப்படவில்லை. சிறையில் உள்ள சில சிறுபான்மை கைதிகள் விடுவிக்கப்படாமல் உள்ளனர். இவை விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்.
“அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்த பிறகு எதிர்க்கட்சியின் கடமை கேள்விக்குறியாகிவிட்டது. இன்று உண்மையான எதிர்க்கட்சியாக மக்கள் மனதில் செயல்படுவது எஸ்டிபிஐ தான்.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் மூலம் தேர்தல் கமிஷன் யாருடைய பெயரையும் நீக்காமல் தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரின் பெயர்களும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற 234 தொகுதிகளின் நிர்வாகிகள் மாநாட்டில் “தேர்தலுக்கு தயாராகிவிட்டோம்” என்று எஸ்டிபிஐ கட்சி அறிவித்ததை நினைவுபடுத்திய அவர், கூட்டணி முடிவுகள் தேர்தல் அறிவிப்பை ஒட்டி எடுக்கப்படும் என்றும் தற்போதைய சூழலில் அதற்கான அவசரம் இல்லை என்றும் தெரிவித்தார்.
பேட்டியின் போது கட்சியின் நெல்லை மண்டல தலைவர் சிக்கந்தர், குமரி மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி, மாவட்ட செயலாளர் செய்யது அலி, தொகுதி செயலாளர் ஷேக் தாவூது, கிளைச் செயலாளர் சலீம் உடனிருந்தனர்.











; ?>)
; ?>)
; ?>)