திருச்சி ஸ்ரீரங்கத்தில் நரியன் தெருவில் திடீரென தீ பற்றியதில் சுமார் பத்து வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. இதனால் வீடுகளில் இருந்த அத்தியாவசிய தேவையான பொருட்கள், பள்ளி குழந்தைகளின் பாட புத்தகங்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகி நாசமானது.

இதனை அறிந்த திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்கள் இன்று அந்த பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று தீயில் எறிந்து நாசமான வீடுகளை பார்வையிட்டார்.
பார்வையிட்ட பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேஷ்டி சேலைகள் மற்றும் பண உதவிகளை வழங்கினார். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் தீயில் இருந்து நாசமான 10 வீடுகளும் மீண்டும் கட்டித்தரப்படும் என உறுதி அளித்தார்.

இனிமேல் இந்த பகுதியில் கூரை வீடே இருக்கக் கூடாது எனவும் 10 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் எனவும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் சான்றிதழ்கள் மீண்டும் பெற்று தரப்படும் எனவும் அங்கிருந்த பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதி அளித்தார். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிகழ்வின் போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)