தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மீது கொலை வழக்கு,இவரது மனைவியின் பெயரில் லண்டனில் சொத்து உள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதனை கண்டித்து குழித்துறை பகுதியில் சாலை ஓரத்தில் அண்ணாமலையை கண்டித்து. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ஆர்.ராஜேஸ்குமார்,தாரகை கத்பட் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலைக்கு எதிரான கண்டன போராட்டம். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர்.பினுலால்சிங் தலைமையில் நடைபெற்றது.

சாலை ஓரத்தில் நடந்த கண்டன போராட்டம். காவல்துறை சற்றும் எதிர்பாராத நிலையில் போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலையின் நடுவில் சென்று போராட்டம் நடத்தியவர்கள். திடிரென அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன். போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து உருவ பொம்மையை பறிக்க காவல்துறையினர் முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள். அண்ணாமலையின் உருவ பொம்மையை முழுமையாக தீக்கரை ஆக்கியதுடன். பிரதமர் மோடி,அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.ராஜேஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மீது எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி அண்ணாமலை அவதூறுகளை பரப்பி வருகிறார். இத்தகைய அனாகரீகமான பேச்சுகளை அவர் உடனே நிறுத்த வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளிப்படுத்திய தகவலானது. பாரதிய ஜனதாவில் 267 பேர் குற்ற பின்னணி உள்ளவர்கள் மேலும் ஆருத்ரா நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பொது மக்களின் பணத்தை சுருட்டி விட்டு வெளி நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார்கள் இது குறித்து தமிழக அரசு அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என செய்தியாளர்களிடம் தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
