மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை கண் டித்தும், வாக்குத்திருட்டு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் திருவட்டார் கிழக்கு வட்டார காங்., சார்பில் சுவாமியார்மடம் பகுதியில் தெருமுனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப் பாளர் வக்கீல் ஒஸ்டின் ஞான ஜெகன் முன்னிலை வகித்தார். காட்டாத்துறை ஊராட்சி காங்., தலைவர் டாம் டிக்க்ஷன் வரவேற்றார். விஜய் வசந்த் எம்.பி., மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், விளவங்கோடு எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட், அகில இந்திய காங்., உறுப்பினர்
ரத்தினகுமார் ஆகியோர் பேசினர்.
விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு பேசியதாவது ;
உரிமை நம்மிடம் இருந்ததால் தான் இந்தியா ஒரு பெரிய சுதந்திர நாடாகவும் ,ஜனநாயக நாடாகவும் இருந்து கொண்டிருக்கிறது, நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய தலைவரை நம்மால் தேர்ந்தெடுக்க முடியவில்லையே என்கின்ற அவல நிலை இப்பொழுது உள்ளது. எங்கெல்லாம் பாஜக அவர்களுக்கு சாதகமாக செயல்பட முடியுமோ அங்கெல்லாம் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இது எல்லா இடங்களிலும் வைரஸ் போன்று பரவி வருகிறது. அதையெல்லாம் கண்டுபிடித்து நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அதனை மக்களிடம் கூறி வருகிறார். ஒரு வீட்டில் நூறு ஓட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றொரு வீட்டில் அப்பா பெயர் ஏ பி சி டி என சேர்க்கப்பட்டுள்ளது.

அதேபோல பல இடங்களில் ஆண்கள் பெண்கள் என வேறுபாட்டில் உள்ளது. பல இடங்களில் இறந்தவர்களின் பெயர்களில் ஓட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளது .இருக்கிறவர்களின் பலரின் பெயர்கள் இறந்தவர்களாக கூறி நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டால் அதற்கான பதில்கள் இல்லை, இது குறித்து கேட்டால் ராகுல் காந்தி திசை திருப்புகிறார். இந்தியாவிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார், எனக் கூறுகின்றனர். ராகுல் காந்தி அவர்கள் எடுத்துள்ள இந்த முடிவுக்கு தேர்தல் ஆணையம் ஆடிப் போய் உள்ளது. தேர்தல் ஆணையம் தனி அமைப்பாக இருந்தது, தற்போது பாஜக-தனக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வருகிறது. தட்டிக் கேட்பவர்கள் மீது ஈடி-ஐ ஏவி விடுகின்றனர். நாங்கள் மேடையில் பேசுவதால் மாறிவிடப் போவதில்லை, இங்கு இருக்கின்ற ஒவ்வொருவரும் நம்மை சார்ந்தவர்களின் ஓட்டுகள் மூலம் யார் வெற்றி பெற வேண்டுமென முடிவுடன் செயல்பட்டு உழைக்க வேண்டும்,
நாம் இப்பொழுது கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறோம், 5 கோடி கையெழுத்து பெற வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி கையெழுத்து பெற வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரத் ஜோடா யாத்திரை தலைவர் அவர்களுக்கு பெருமையை கொடுத்தது, அது நமது மண்ணிலிருந்து தொடங்கியது நமக்கு பெருமை சேர்த்தது. அதேபோல இந்த ஓட்டு திருட்டு இங்கு இருக்கிற ஒவ்வொரு மக்களுக்கும் ,அதாவது வியாபார குடி மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் செயல்பட வேண்டும், மேலும் பண மதிப்பிழப்பு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றால் பொதுமக்களுக்கு மத்திய அரசால் படும் துயரங்களை குறித்து எடுத்துக் கூற வேண்டும். இவர்களின் மோசடி வேலைகள் தமிழகத்தில் எடுபடவில்லை நமது பூத் அமைப்புகள் ,கூட்டணி கட்சியின் பலம் ஆகியவற்றால் நாம் வலிமையாக உள்ளோம் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்,
நமது ஓட்டு நமது உரிமை ,நாம் வாக்காளர்களை சேர்த்தல், திருத்தல், நீக்கல் போன்றவற்றில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும், வாக்கு திருட்டை தடுப்போம், 2026 தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தல் நம்முடைய கூட்டணி வெற்றி கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி கொடுக்க வேண்டும் நம்முடைய பங்களிப்பு முக்கியம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். மற்றும் மாநில, வட்டார, நகர ,பஞ்சாயத்து, கிளை கமிட்டி உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார் .

நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகள் தங்கநாடார், பேராசிரியர் வர்கீஸ், ஜெகன்ராஜ், ஆற்றூர்குமார், ஜாண்சேவியர், குமரன்குடி ஜஸ்டின், சிவசங்கர், ஞானசிகாமணி, கிங்ஸ்லி தாமஸ், ஏனோஸ், ராபர்ட், வேர்க் கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங் குமார், காட்டத்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் இசையாஸ், ஏற்றக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் ஜாண்றோஸ், வேர்கிளம்பி பேரூராட்சி துணை தலைவர் துரைராஜ் மனுவேல், வட்டார நிர்வாகிகள் ரவிக்குமார், தர்மராஜ், பிரான்சிஸ், வின்சென்ட், விஜின், குணசீலன், விஜயகுமார், மெர்ஜின்சிங், சுபின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.