• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

பிபின் ராவத் உடலுக்கு பொதுமக்கள் இன்று அஞ்சலி

Byகாயத்ரி

Dec 9, 2021

கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து குன்னூர் வெலிங்கடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 14 இராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் முப்படைத் தளபதி பிபின் இராவத், அவரது துணைவியார் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.


ஹெலிகாப்டரை இயக்கிய கேப்டன் மட்டும் பலத்த காயத்துடன் (80%) உயிர் பிழைத்து தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். பிபின் ராவத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று டெல்லியில் உள்ள ராவத்தின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன்பிறகு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நாளை டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.