• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடியுடன் மம்தா திடீர் சந்திப்பு

Byகாயத்ரி

Nov 25, 2021

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று திடீரென டெல்லி வந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.

மாநில விவகாரங்கள் தொடர்பாக பிரதமருடன் பேசியதாக மம்தா கூறி உள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘‘மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக தொழில் மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளேன். திரிபுரா மாநிலத்தில் பாஜக நிர்வாகிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அந்த விவகாரத்தை பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். உபி தேர்தலில் அகிலேஷ் யாதவ் எங்கள் உதவியை கேட்டால், ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம்’’ என்றார். டிசம்பர் 1ம் தேதி மும்பை செல்லும் மம்தா மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்திக்க உள்ளார்.