• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிளாமருக்கு எஸ் சொன்ன கீர்த்தி… ஓஓ…..இதுக்குதான் யோகாவா…

Byகாயத்ரி

Jun 22, 2022

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில வருடங்களில் கொழுகொழுவென்று இருந்த தனது உடல் எடையை குறைத்து தற்போது சற்று ஒல்லியான தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.

முன்னனி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்த மாஸ் காட்டிய கீரத்தி பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இதற்கு முன்பு கிளாமருக்கு ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லி வந்த கீர்த்தி சுரேஷ் சற்று உடல் எடையை குறைத்த பிறகு கிளாமராகவும் படங்களில் தோன்ற தொடங்கி இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் உடல் எடை குறைய ஒர்கவுட் மற்றும் யோகா என இரண்டையுமே சேர்த்து செய்து வருகிறார். உலக யோகா தினத்தை முன்னிட்டு கீர்த்தி தான் யோகா செய்யும் வீடியோவை அவரது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுயிருக்கிறார். அதில் கீர்த்தி பல யோகாசனங்களை சுலபமாக செய்வதை பார்த்து ரசிகர்கள் வியந்து கமென்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.