• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருவனந்தபுரம் நடை பயணத்தின் நிகழ்வு

அய்யா வழி 187_ வது சுவாமி தோப்பு-திருவனந்தபுரம் நடை பயணத்தின்
மூன்றாம் நாள் நிகழ்வில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.

சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 187_ வந்து நடை பயணம். அய்யா வைகுண்டசாமி பாதயாத்திரை தக்கலை பரைகோடு தாங்கலில் குமரி எம்பி விஜய்வசந்த் சாமி தரிசனம் செய்தார்.

அய்யாவைகுண்டசாமி சாமிதோப்பு வடக்கு வாசலில் தவம் இருந்தார். அப்போது திருவனந்தபுரம் மன்னர் சுவாதி திருநாள் தனது படையை அனுப்பி அய்யா வைகுண்டசாமியை கயிறு கட்டி அடித்து துன்புறுத்தி இழுத்துச் சென்றனர். இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரம் வIரை வைகுண்டசாமி பாதயாத்திரை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பாதயாத்திரை சனிக்கிழமை சாமிதோப்பு அன்புவனம் முத்திரிக் கிணற்றில் இருந்து பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் யாத்திரை தொடங்கியது.

இன்று தக்கலை பரைகோடு பகுதியில் உள்ள அய்யா பதியில் மூன்றாம் நாளான (நவம்பர்_18)ம் யாத்திரை நிறைவு செய்த போது கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார், வருகை தந்த விஜய் வசந்த் அவர்களை பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார் தலைப்பாகை அணிவித்து வரவேற்பு அளித்தார். பின்னர் அங்குள்ள யாத்ரீகர்கள் மத்தியில் உரையாற்றினர்.

இந்த பாதயாத்திரையானது சுசிந்திரம், நாகர்கோவில், பத்மநாபபுரம், தக்கலை, அழகியமண்டபம், மார்த்தாண்டம்,அமரவிளை வழியாக வருகிற 21-ந்தேதி திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியில் உச்சிப்படிப்பு அய்யாவுக்கு பணிவிடையுடன் நிறைவடைகிறது.
இந்த நிகழ்வின் போது நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், வட்டார தலைவர் பிரேம்குமார், நகர தலைவர் ஹனுகுமார், திருவதாங்கோடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சபீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.